வியாழன், 9 மார்ச், 2017

சங்கத்தமிழ் கவிதப்பூங்கா

பாரதி தாசன் சான்றிதழ்போட்டியாளர்
கண்ணீரில் கலந்த வாழ்க்கை
அலைகடல் தேடித்தானே எங்கள் வாழ்க்கை
வலை வீசினால்தான் மீன் கிடைக்குது
மலையைத்தள்ளி எலி பிடிக்கும் வித்தையிது
நிலை குலைந்து போகும் படகு காற்று வீசினால்
கடலுக்குச் சென்றவன் திரும்பி வரும் வரை
உடலுக்கு உணவு கொண்டு வந்தால்தான்
கலையிழக்கும் கணவன் வரும் வரை
அலைகளைப்போல் விழியிரண்டும் அலையாடும்
ஒரு நாள் போனவன் மறு நாள்தான் வருவான்
ஒவ்வொரு நாளும் வரும்வரை துயரம்தான்
ஒரு சாண் வயிற்றுக்காக வாழ்வு முழுதும் போராட்டம்
உயிரை பணையம் வைப்பது தினம் நடக்கும் வாடிக்கை
ஆதவன் தயவில்தானே நிலவு காயுது
காதலன் தயவில்தானே பெண்மை ஓங்குது
வரும் புயலையும் எதிர்த்துத்தானே வலை வீசுறான்
வாழ்வுக்காக அனுதினமும் போராடி சாகிறான்
தண்ணீரில்தான் தினம் வாழ்க்கை ஓடுது
கண்ணீரில்தான் தினம் வாழ்க்கை கலந்து ஓடுது
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக