புதன், 8 மார்ச், 2017

சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா ----காதல் கவிதை போட்டி --- 04.012017


04.012017 அன்று நடந்த காதல் கவிதை போட்டி முடிவு வெளி இட்டுள்ளேன்.
காதல் கவி போட்டியை பொறுத்தவரை கீழ் கண்ட விரங்கள் எடுத்து கொண்டு நடுவர் பார்த்து தேர்வு செய்துள்ளார்கள்.
1. காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதும் கவிதை
2. வித்தியாசமான படைப்பு
3. கற்பனை வளம்
4. சொல்லாட்சி
5. படிக்கும் போது மனதை வருடும் தன்மை
6. இலக்கிய நயம்
7. உவமை உவமானம் பயன்படுத்திய விதம்
8. கட்டமைப்பு
9. நளினம்
10. இலக்கண அமைப்பில் பிறழாமை
சிறப்பான முறையில் தேர்வு செய்த கவிதாயினி கவி நுட்பம் அவர்களுக்கு குழுமம் சார்பாக நன்றிகள்.
வெற்றி பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள
தலைப்பு---- மொழியிழந்து மெளனத்தில்துளிர்க்கிறது காதல்
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
இருவர் விழிகளும் சந்தித்ததில்
இருமனம் கலந்தது
வாய்மொழிக்கிடமின்றி
நெஞ்சில் நிறைந்தபிறகு
நினைவினில் பேச்சில்லை
என் கண்ணின் விழித்திரையே
என் அன்பில் மலர்ந்தகாதல் தாமரையே
வெள்ளை நதியில்வெண்ணிலா மிதக்க
வெள்ளி நிற மீன்கள் எழுந்து
கொள்ளை கொஞ்சும் பூஞ்சோலை நீயே
அல்லும் பகலும் உன் நினைவே
சொல்லும் பொருளும் அதன் நிறைவே
துள்ளும் மனதை அடக்கி
மெல்லச் சொன்னாள்விழி அனுப்பும் தூதில்
நீ பார்த்த பார்வையிலே
மனம் பாகாய் உருகிறது
பார்க்கும் இடந்தோறும் உன் பூ முகம்
தோணுதடி விழியாலே மொழி பேசும்
வித்தகி நீ உனக்காக நான்
வானத்தை வில்லாக வளைப்பேன்
வையத்தை குடையாக பிடிப்பேன்
கம்பனாக மாறி கவிதை புனைவேன்
கண்ணே உன் பூவிதழின் ஓசையிலே
கதை படிப்பேன் நாளும்
மொழியிழந்த மெளனத்தில் தான்
துளிர்க்கிறது நம் காதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக