புதன், 8 மார்ச், 2017

அமிர்தம்--3-2=2017--காதல் கவிதைப்போட்டி

நமது அமிர்தம் குழுவில் (02-02-2017 –03-02-207) தேதிகளில் நடந்து முடிந்த காதல் கவிதைப்போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே சிறப்பாக கவிதை எழுதி இருந்தனர் அவர்களுள்
நடுவர் அ.முத்துவிஜயன் தேர்வுசெய்து
சிறந்த கவிதைக்கான
சான்றிதழ் பெறுகிறார்
கவிஞர்சரஸ்வதிராசேந்திரன்
அவருக்கு கவிஞர் ஜெயசுதா,. நடுவர் அ.முத்துவிஜயன் ஆகியோருடன்
அமிர்தம் குழுமமும் வாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்கிறது
உன்னை எதிர்பார்த்து
உன்னை எதிர்பார்த்து
சன்னல் ஓரம் நின்றேன்
என்னைத் தவிக்கவிட்டு
கண்ணா நீ எங்குப் போனாய் ?
,உன் தேனான பேச்சினிலே இந்த
மான் விழுந்தாள் மயங்கியே
நான் விழுந்த நாள் முதலாய்
ராப் பகலாய்த் தூக்கமில்லே
ஊது பத்தி ஏத்தி வச்சேன்
ஊசிமல்லி வாங்கி வச்சேன்
கண்ணா நீ வரவில்லை என்
கண்ணிரண்டும் தூங்கவில்லை
எங்கே நீ சென்றாயோ
மங்கை மனம் புரியாமல்
நித்தம் உனைத் தேடுறேன்
சித்தம் கலங்கி வாடுறேன்
வாழ்க்கை எதுவென்று புரியவில்லை
வாய் விட்டு அழவும் வசதியில்லை
விதியாலே வந்ததா இல்லை இது
சதியால் வந்த தொல்லையா
நெருப்பிலிடை புழுவாகத் துடிக்கிறேன்
பொறுப்புணர்ந்து நீயும் விரைந்து வா
உன்னை எண்ணியே உயிர் வாழ்கிறேன்
என் மனக்கவலை மாற்றும் மருந்தாக வா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக