சனி, 31 டிசம்பர், 2016

கவியுலக பூஞ்சோலை 12-12-2016




வணக்கம்!!!
கவியுலகப் பூஞ்சோலை பாவலர்களே....
12.12.2016 நாளாம் ஒவ்வொன்றாய் திருடுகிறாய் தலைப்பு போட்டிக் கவிதையில், சிறப்பான கவிப்படைத்து
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சரஸ்வதி ராசேந்திரன்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்...
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
கண்ணதாசன் சான்றிதழ்----6
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்--ஆரம்பம்
ஓயாமல் திரிந்தேன் --- முடிவு
ஒவ்வொன்றாய் திருடுகிறாய்
கள்ளி நீ உன் கண்களால் வலை வீசி
துள்ளி ஓடுகிறாய் உன் தோற்றம் அழகுதான்
முத்துப்பல் காட்டி மோகனமாய் புன்னகைக்க
சித்துக்கள் எங்கு கற்றாய் சிந்தை மயக்கிட
எண்ணக் கடலோரம் உன் நினைவு கூடுதடி உன்
கன்னித் தமிழோசை என் காதில் கேட்குதடி
வெள்ளி முளைக்கையிலே உன் கண்ணொளி பாயுதடி
பள்ளி எழுகையிலே உன் பால்முகம் தோன்றுதடி
வந்து வந்து முகம் காட்டுகிறாய் என்
சிந்தையை பறி கொடுத்தேன் பொருள் மதியென
ஒவ்வொன்றாய் திருடி ஓன்றுமில்லாமல் ஆக்கினாய் ஒருவரும் எனக்கில்லையாரிடம் முறையிடுவேன்
என்னை மறந்தேன் உறக்கம் மறந்தேன்
சொன்னதெல்லாம் மறந்தேன் சொத்து சுகம் இழந்தேன்
சாலையிலே தூங்குகிறேன் சந்து பொந்து சுற்றுகிறேன்
வேலையெல்லாம் விட்டு விட்டு உன் நினைவில் வாடுகிறேன்
நோய் தந்த நீதானே நோய்க்கு மருந்து
வாய் திறந்து பேசு மவுனத்தை விட்டு என் உயிர்
சாய்ந்திடாமல் நிலைத்திட சட்டென வந்திடு
உன்னிடம் தொலைத்த இதயத்தைத் தேடி
உன்னைத் தொடர்ந்தே ஓயாமல் திரிந்தேன்
சரஸ்வதி ராசேந்திரன்
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
அவருக்கு எமது குழுமம் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுகளும்.... தலைமை நிர்வாகி ஒரத்தநாடு. நெப்போலியன். மற்றும் குழுமம்...'

2 கருத்துகள்: