ஞாயிறு, 22 அக்டோபர், 2017

ஒருகவிஞனின் கனவு-- நமக்கான நேரம்

வெற்றி பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும்
ஒரு கவிஞனின் கனவு தேர்வுக்குழுவினர் சார்பில் வாழ்த்துக்கள்
நமக்கான நேரம்
நல்லன யாவுமே
நன்மை நிறைத்திடும்
வாடி விலகாமல்
கூனிக் குறுகாமல்
தேடிப் பெறுவோம்
நமக்கான நேரத்தை
திருட்டுக் குணமும்
புரட்டுச் செயலும்
விரட்டி முன்னேறுவோம்
வானத்தைப் போல
மனதை விரித்து
ஞானமுடன் வாழ்வோம்
சாபமற்ற வாழ்க்கையே
பாபமற்றது உணர்
நல்லதே எண்ணுவோம்
நமக்கான நேரம் வரும்
நெறிமுறை யாவும்
இறைவழி ஆகும்
முறையான வாழ்வு மிகும்
நமக்கான நேரம் வரும்
நம்பிக்கை ஒன்றே
நமக்கிட்ட வரமாய் கொள்வோம்
இன்னாருக்கு இன்னார்
என்பது இறைவன் கையில்
ஊஞ்சலாடும் மனதை நிறுத்து
உணர்ந்து வாழ்தலே நன்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக