ஞாயிறு, 22 அக்டோபர், 2017

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா --18-9-17-செம்புலப்பெயல் நீர்போல

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய .18/09/2017 அன்று நடந்து முடிந்த காதல்
கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற
கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் : கவிஞர் . Sukhumar Thiagarajan
அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் தலைவர் சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
நெஞ்சந்தாங்கலந்ததுவே....
சான்றிதழ். 9
வாராது வந்த மாமணியே
வரமாக வந்த கலைவாணியே
உன்னையே எண்ணி எண்ணி
உற்சாகமடைந்தேன் நானே
தூக்கத்தை விட்டெழுந்தேன்
தூய அன்பு பட்டெழுந்தேன்
விண்ணின் மீன்கள் உன்
கண்ணிலே நான் கண்டேன்
சிப்பிக்குள் முத்துக்கள் உன் பற்கள்
சிந்தாத தேன் கிண்ணம் உன் கன்னம்
வெயிலுக்குத் தென்றலாக வந்தாய்
வாழ்வு செழிக்க நல்ல பதில் தந்தாய்
மனசை மயக்கி நிற்குது
மாலை நேர பூங்காத்து
மாலை இட வந்து நின்ற
மாமன் உசிரே நீதாண்டி
செம்புலப் பெயல் நீர் போலஅன்புடை
நெஞ்சந்தாங்கலந்ததுவே
இறைவனின் தீர்ப்பு இது
எவர் இதை மாற்றுவது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக