ஞாயிறு, 22 அக்டோபர், 2017

7-8-2017சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா-பொண்ணு விளையற மண்ணு

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 07/08/2017நடந்து முடிந்த கிராமியக் கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்கள் சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் சரஸ்வதி பாஸ்கரன்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
பொன்னு வெளையுற மண்ணு
பொறுப்பா பார்த்தோம் கண்ணாய்
முப்போக சாகுபடி செய்தோம்
எப்போதும் விளைச்சல் கண்டோம்
பொன்னைப் பழிக்கும் கதிர்கள்
பின்னி அசைந்தாடும் அழகு கண்டோம்
கதிரடிச்சு குதிரு பொங்க
காவேரி அன்னையை கும்பிட்டோம் இப்போ
தேனாறும் பாயலே வயலில்
செங்கதிரும் சாயலே நீரில்லாம
மக்கள் வயறும் காயுது
எக்காலம் தீரும் இந்த கொடுமையிது
விளை நிலமெல்லாம் விலை நிலமாச்சு
வேற்று நாட்டான் ஆசை காட்டி
வேட்டு வச்சான் விவசாயத்துக்கு
விதையில்லா மரபணுவை புகுத்தி
காடு கழனியெல்லாம்
வீடாப் போச்சு
நாடே நலம் கெட்டுப்போச்சு
நன்மை தந்த விவசாயமும் போச்சு
உழுதுண்டு வாழ்ந்த வாழ்வு மாயமாச்சு
பழுது பட்டு நிற்கிறோம் பாவங்களை சுமந்தபடி
பகுத்தறிந்து வாழ்ந்த பக்குவமும் போச்சு
பொன்னு விளைஞ்ச மண்ணும் பாழாப்போச்சு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக