ஞாயிறு, 22 அக்டோபர், 2017

தமிழமுதுகவிச்சாரல் --20=9=17-மந்திலே உட்கார்ந்து மணியடித்தாய்

இனியவரீர்,, அனைவருக்கும் வணக்கம் பாவலர்களே
****
*#தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் : 20/09/17 நாளாம் போட்டி கவிதையின் #தலைப்பு_#மனதிலே_உட்கார்ந்து_மணியடித்தாய்

****
வெற்றிச் சான்றிதழ் பெறுபவர் #கவிதாயினி_சரஸ்வதி_ராசேந்திரன் அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்துகளும்
#நிர்வாகி_கவிதாயினி_பூங்காவனம்_ரவீந்திரன் அவர்கள் நடுவராக தலைமையேற்று சிறப்பான கவிதைகளை தேர்வு செய்தமைக்கு அவருக்கு நன்றிகளும் வாழ்த்தும்
#தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகத்தினர்
மனதிலே உட்கார்ந்து மணியடித்தாய்
மனதிலே உட்கார்ந்து மணியடித்தாய்
உன்னிலே என்னை நெய்து விட்டாய்
வண்ணக் கனவுகளை அள்ளித் தந்து விட்டாய்
எண்ணமெல்லாம் நீயே நிறைந்து விட்டாய்
கண்ணாலே உன்னைக் கண்ட நொடிதானே
என்னுள்ளே ஏதேதோ மாற்றங்கள்
என்று உந்தன் மெளனம் கலைப்பாய் ?
இன்றே சொல் என்னை நீஎப்போது ஏற்பாய் ?
காதலென்ன கழற்றி வீசும் சட்டையா ?
கண்ணே நான் என்ன உணர்ச்சி இல்லா மரக்கட்டையா ?
உன் கண்கள் என்ன என்னை சுழற்றும் சாட்டையா ?
என் உயிரோட்டமே உன் அன்பு எனும் கோட்டைதான்
சிறகடித்து சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த என்னை
சிறை பிடித்து உன் மனக்கூண்டில் அடைத்துவிட்டாய்
சிந்தையில் அலைமோதி சிறைபட்டேன் அகதியாய் இன்று
சித்தப்பிரமைப் பிடித்து சுழன்று கொண்டிருக்கிறேன் ஊர் தூற்ற
மனதில் உட்கார்ந்து மணியடித்தாய் உன்
மனவாசல் மணியை நான்அடித்தும் ஏன் நீ திறக்கவில்லை
இதயம் உருகி உன்னை அழைக்கின்றேன் மன
இருட்டைக் கடந்து செல்லத் துடிக்கின்றேன் வா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக