ஞாயிறு, 22 அக்டோபர், 2017

சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா-1-9-17-விடாமுயற்சியும் வெற்றியும்

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 01/09/2017நடந்து முடிந்த பாரதிதாசன்
கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற
கவிஞர்கள் சரஸ்வதி ராசேந்திரன் அவர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் : சா.சத்தியகுமார்
அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் தலைவர் சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
முடியாதது எல்லாம் முயலாததால்தான்
இயலாதுஎன்றஎண்ணத்தை
இதயத்தைவிட்டு கழற்றி எறி
முடியும் என்று முயன்றுபார்
வெற்றிக்கனி கையில் விழும்
ஊக்கத்தோடு செயல் பட்டால்
ஆக்கம் பெறும் வெற்றி
முட்டி மோதித் தொடர்வாய்
முன்னேற்றம் எங்குமே வெற்றி
உன்னத உழைப்பே உறுதியாய் கொள்
உந்தன் சோம்பலை விட்டு விடு
தேனீ எறும்பை போல சுறுசுறுப்பாய் உழை
தெம்புடன் முயற்சியில் இறங்கி விடு
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கழகு
வீறு கொண்டு எழுந்து போராடு
தொடரும் சோதனை தூளாக்கு
தொடர்ந்து செய்யும் முயற்சியே வெற்றியாகும்
இலக்கு இல்லா முயற்சியே
இறக்கை இல்லா பறவைபோல்
விடா முயற்சியே வெற்றிதரும்
தோல்வி கண்டு துவண்டு விட்டால்
தூரம் போகும் வெற்றிதான்
தன்னம்பிக்கை வளர்த்து விடு
தாழ்வை நீக்கி முயன்றிடு
வெற்றி பெற்ற அனைவருமே
தோல்வியை தழுவிவந்தவர்கள்தான்
நம்பி நீயும் போராடு
நாளை வெற்றிக்கு வித்திடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக