ஞாயிறு, 22 அக்டோபர், 2017

19-9-17=சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா--அன்பிற்கும் அடைக்குந்தாழுண்டோ

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய .19/09/2017 அன்று நடந்து முடிந்தபாரதிதாசன்
கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற
கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் : கவிஞர் Madhura
அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் தலைவர் சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
அன்பதனை வெளிப்படுத்த முடியுமா அந்த
அன்பதனை அடைத்து வைக்க முடியுமா
அன்பாலே ஆகாதது ஒன்றுமில்லை
அன்னையின் தோற்றத்திலே ஆண்டவனைபார்க்கிறோம்
தாயின் அன்பிற்கு ஈடேதும் உண்டோ
தடம் மாறிப் போகாமல் தடுக்கும் அன்பு
அகம்பாவம் தீர்க்கும் பரிவான அன்பு
அறியாமை நோய் போக்கும்மருந்தான அன்பு
அன்னையவள் அன்பே அகிலத்தில் சிறந்தது
மனமே அனைவரிடமும் அன்பு காட்டு
அதனால் குறைவது ஒன்றுமில்லை
நிறைவது பெறுவார் மனமே
அனைத்து உயிரினமும் அன்புக்கு அடங்கும்
அன்பே இன்ப ஊற்று அதனை
அழகாக சொன்னார் புத்தர்
அன்பே சிவமென்றார் சைவர்
அயலாருக்கு அன்பு செய் என்றார் ஏசு
அன்பின் உரு அல்லா என்றார் நபிகள் நாயகம்
அகிலத்தில் சிறந்தது அன்புடைமை அது
அனைவருக்கும் சொந்தமான பொதுவுடைமை
அறிந்து கொள்வோம் அன்பிற்கு அடைக்கும் கதவில்லை
அன்பு காட்ட என்ன தடை மொழியா இனமா
மதமா பணமா காசா பொருளா இல்லை
மனம் மட்டும் போதும் அன்பு செய்ய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக