ஞாயிறு, 22 அக்டோபர், 2017

29-8-17 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா -புல்லென்றே நினிக்கின்றீர்

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 29/08/2017நடந்து முடிந்த பாரதிதாசன்
கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற
கவிஞர்களுக்கு அப்துல் சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் : ஆ. விஜயலெட்சுமி
அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் தலைவர் சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
புல்லாக நினைக்கின்றீர்
கல்லான மனம் படைத்தீர்
புல்லென்றே நினைக்கின்றீர்
பழமையில் நின்றாலும்
புதுமைதனைச் செய்தாலும்
பொல்லாங்கு பேசியே
புல்லாக நினைக்கின்றீர்
அடுப்படியையும் மறப்பதில்லை
அகிலத்தை ஆளவும் தயங்கவில்லை
சுமைகளைச் சுமந்து
அமையும் வாழவை
சுவையாக மாற்றவும் செய்கிரோம்
சிலுவைகளைச் சுமந்தே
இருப்பினும் புல்லென்றே நினைக்கின்றீர்
வரும் புயலைஎதிர்த்து நின்று குடும்ப்
வாழ்வுக்காக தன் சுகங்களை மறந்து
சிறகடிக்கும் ஆசைகளை விட்டுக்கொடுத்து
மற்றவருக்காக வாழவும் தயங்குவதில்லை
ஆயுதம் தாங்கவும் தெரியும்
பாயும் புலியாய் மாறவும் தெரியும்
பெண்ணால் ஆகாதது எதுவுமில்லை
பெருமையாய் எண்ண வேண்டியவளை
புல்லாக நினைக்கிக்கின்றீர் கல்லான மனம் கொண்டோரே
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக