ஞாயிறு, 22 அக்டோபர், 2017

21-7=2017 சஙத்தமிழ்ப்கவிதைப்பூங்கா-கைனிறைய காசு

கை நிறைய காசு ( பாரதி தாசன் சான்றிதழ் போட்டியாளர்)
சம்பளம் வாங்கினாலும்
கிம்பளமும் பெறுவதால்
கை நிறைய காசு
நியாயமில்லா தராசு
உழைப்பால் வருவதே
உண்மையான காசு
பை நிரப்பும் தவறான காசு
கையை சுட்டுவிடும் ஒரு நாள்
காசில்லாதவன் கணவனே ஆனாலும்
தூசியாய் மதிக்கும் காலம்தான்
மாசு பட்டாலாவது பணம் சேர்ப்பவன்
வீசி எறியப்படுவான் ஒரு நாள்
சிக்கன வாழ்வே செம்மையான வாழ்வு
பக்குவமாய் நடந்து நேர்மையாய் காசு சேர்
அன்றாட வாழ்க்கை அமைதி பெற வேண்டுமெனின்
அளவோடு செலவு செய்து நிறை வாழ்வு வாழ்வதே
கூடை கூடையாய் பணம் சேர்த்தாலும்
கூட வரப்போவதில்லை அந்த பணம்
கட்டுக் கட்டாய் பணம் வேண்டாம்
விட்டு விடுங்கள் அதிக ஆசையை
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக