ஞாயிறு, 22 அக்டோபர், 2017

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா -6-9-17= நினைக்கத்தெரிந்த மனமே

நினைக்கத்தெரிந்த மனமே
காலத்தின் கோலமா
கிரகங்களின் மாற்றமா
என்னவென்று சொல்வது
நான் உன்னை நினைத்தது
கண்ட நாள் முதலாகாதல்
கரையுடைத்தது மனம்
நினைவில் மட்டுமல்ல
கனவிலும் உன் முகம்தான்
கணத்தில் நீ என்னைக்
கடந்து சென்றாலும் உன்
வேல் விழியால் என்னை
வீழ்த்தி விட்டாய் தெரியுமா ?
அன்று முதல் என் மனதில்
உணருகிறேன் பிரளயத்தை
நினைக்கத் தெரிந்த மனதுக்கு
மறக்கத்தெரியாதது விந்தைதான்
இருமனம் கலப்பதே திருமணம்
இறுதியாய் சொல்லிவிட்டு உன்
வருங்கால கணவனுடன் சென்று விட்டாய்
செரிமானம் இல்லாமல் நரக வேதனையை
விரதமென எண்ணி நாட்களை கடத்துகிறேன்
ஒருதலைக்காதலென்றாலும்
ஒரு உறுதியோடு வாழ்கிறேன் உன் நினைவிலே
நினைக்கத்தெரிந்த மனதுக்கு
மறக்கத்தெரியாதலால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக