ஞாயிறு, 22 அக்டோபர், 2017

சிறுகதை -- நதியோர நாணல்கள்-20=9=17

நதியோர_நாணல்கள்!
#சிறு_கதைப்_போட்டி#
#அன்பே_கடவுள் எனும் தலைப்பில் 17.09.2017 - 20.09.2017 வரை நடைபெற்ற போட்டியில் சிறுகதை எழுதி தொிவு செய்யப்பட்ட எழுத்தாளா்
அன்பே கடவுள்
தூங்கிக்கொண்டிருந்த ஜனனிதிடுக்கிட்டு எழுந்தாள்..
‘’என்னங்க நான் ஒரு கனவு கண்டேங்க விடியற்காலைக்கனவு பலிக்கும்பாங்களே. என் கனவும் பலிக்குமுனு தானே அர்த்தம் ‘பக்கத்தில் படுத்திருந்த கணவன் அமுதனிடம் கேட்டாள்
‘’ என்ன கனவுன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?’’
‘’இத்தனை வசதியிருந்தும் நமக்கு குழந்தை பாக்கியமே இல்லேன்னு நான் வருத்தப்பட்டது கடவுள் காதிலே விழுந்திடுச்சு போலேயிருக்குப் போலே ஒரு சின்னப் பெண் கனவிலே வந்து ஒருவாரம் தொடர்ந்து வீரமா காளிக்கு அபிஷேகம் செய்து அன்னதானம் செய்தால் குழந்தை பிறக்கும்னு சொல்லுச்சுங்க. நான் நாளைக்கே பூஜையைத் தொடங்கலாம்னு இருக்கேன் . நீங்க கூட இருந்து ஒத்துழைக்கணும்’’என்றாள் ஜனனி ‘’
’’ நீ சொல்வது உனக்கே நியாயமா இருக்கா? தினமும் நான் கோவிலில் வந்து நின்னா அலுவலகத்தில் மானேஜர் சும்மா விடுவாரா? ‘’
‘’அப்ப ஒண்ணு செய்யுங்க பூஜை முடியும் கடைசி நாளாவது கண்டிப்பா வந்துடணும் அன்னைக்கு ஒரு நாளாவது லீவு போடக்கூடாதா? இர்ண்டுபேரும் சேர்ந்து அன்னதானம் செய்தால் தான் பலன் உண்டாம்
சரிதேனே ?’’
அமுதனும் ஒத்துக்கொண்டான்
அடுத்த நாளே ஆசாரமாகக பூஜையை ஆரம்பித்தாள் ஒருமைப்பாட்டுடன்
அன்னதானம் செய்தாள்
ஒருவாரம் ஓடியதே தெரியவில்லை.
கடைசி நாள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டு காத்திருந்தாள் புறப்படும் நேரத்தில் போன் வர இதோ ஒருனிம்டத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லிய அமுதன் நேரமாகியும் வரவில்லை
ஜனனி தவித்தாள் கடவுளே இது என்ன சோதனை ? கடைசி நாளில் கூட
கணவன் வராதது அவளுக்கு அபசகுணமாகத்தெரிந்தது. பூசாரியோ நேரம் ஆவதைச் சுட்டிக்காட்ட மன சஞ்சலத்தோடு பூஜை செய்து அன்னதானத்தையும் முடிக்கையில் அமுதன் வந்தான்.
‘’ சாரி ஜனனி ‘’
‘’பேசாதீங்க அத்தனை சொல்லியிருந்தும் இப்படி லேட்டா வந்து நிற்கிறீங்களே என் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் ‘’ முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள்
‘’ இதோ பார் ஜனனி நான் வேண்டுமென்றா அப்படி செய்தேன்
பிளட் பாங்கிலிருந்து போன் வந்ததுஒரு நான்கு வயது குழந்தைக்கு உடனடியாக ஒ குரூப் ரத்தம் வேண்டுமென்றும் அவசரம் என்றும்
அதான் ஓடினேன் னான் ரத்தம் கொடுத்ததால் குழந்தை உயிர் பிழைத்துவிட்டது குழந்தையின் பெற்றோர் ஆனத்தக்கண்ணீர் விட்டார்கள்
ஆனால் திரும்பி சீக்கிரம் வரவேண்டுமென்றுதான் கிளம்பினேன் வழியில்
ட்ராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டேன் அதான் தாமதம்.. அந்த அன்னைதானே
என்னை அனுப்பி வைத்தாள் அவளுக்குத்தெரியும் நமக்கு நல்லது செய்ய .. ‘’சொல்லியபடியே வீரமாகளியைப்பார்த்தான் அன்னையின் கண்களில் தெரிந்த அன்பும் கருணையும் புன்னகையும் அவனுக்கு நம்பிக்கையைத்தந்தது…..
ஆம் அன்பே கடவுள் ஜனனியின் கர்ப்பப்பைத் திறந்தது…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக