ஞாயிறு, 22 அக்டோபர், 2017

சங்க்த்தமிழ் கவிதைப்பூங்கா 11=2017 இனிய எதிர்காலம்வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 11/07/2017நடந்து முடிந்த பாரதிதாசன் கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்கள் சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் கவிஞர் மதுரா
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
இனிய எதிர்காலம்
இனிய எம் குழந்தைகளே
இறைவன் தந்த செல்வங்களே
நல்ல பழக்கம் கொண்டிடுவீர்
நாட்டின் நெறி முறை காத்திடுவீர்
ஊக்கம் கொண்டு படித்திடுவீர்
ஆக்கம் வாழ்வை நிறைத்திடுமே
பஞ்சம் வறுமை ஓடிவிடும்
நெஞ்சம் நிம்மதி கொண்டிடும்
திறமைகள் உனக்குள் வளர்த்துவிடு
தீமை எண்ணத்தை ஒழித்துவிடு
பயங்களைப் போக்கி பயன் நிலை காட்டி
நயமுடன் வாழ்ந்து நன்மை அடைவாய்
தன்னம்பிக்கை கொண்டு செயல்படு
தலை நிமிர்ந்தே நீ வாழ்ந்துவிடு
வஞ்சம் மனதில் கொள்ளாதே
லஞ்சம் என்றும் வாங்காதே
பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் நின்று
பண்பை வளர்த்து பகுத்தறிவை மேம்படுத்து
தந்தையும் தாயையும் சிந்தையில் வைத்து
வந்தித்து வாழ்வதுதான் வாழ்வு மறக்காதீர்
செயலற்று நின்றால் பயனொன்றும் இல்லை
பெயர் சொல்லும் படியாய் வாழ்வதே வாழ்க்கை
பெண்ணென்றும் ஆணென்றும் பேதம் வேண்டாம்
பெற்றிடும் வெற்றியில் மேதைகள் ஆவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக