ஞாயிறு, 22 அக்டோபர், 2017

4-8=2017 சஙத்தமிழ் கவிதைப் பூங்கா=பாரதி கண்ணம்மா

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 21/07/2017நடந்து முடிந்த பாரதிதாசன் கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்கள் சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் இராமதாஸ்காந்தி
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள் பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா
பாவை நீ என் செல்லம்மா
போதை தரும் கண்ணாலே
பாதை மாற்றிய பெண்மணி நீ
கண்மணி நீயெனக்கு
கற்பக விருட்சமடி
விண்மணி உன் பார்வையில்
என் வெம்பிணி தீருமடி
அழகு நடையழகும்
ஆடும் இடையழகும்
அள்ளி அணைத்திடவே
ஆசைகள் மீறுமடி
தினந்தோறும் மாலைவந்து விட்டாலே
மனசுக்குள் மின்னல் போல அலைபாயுதே
சித்திரமே உன் நினைவினில்
சிந்தை மகிழ்ந்தாடுதடி
நித்தம் நித்தம் உன் கனவால்
நித்திரையும் கலையுதடி
பாரதிக்கு செல்லம்மா இந்த
பாவலனுக்கு நீ கண்ணம்மா
எப்பொழுதும் அருகினிலே நீ
இருக்க வேண்டும்
இன்பமெல்லாம் வாழ்க்கையிலே
இசைய வேண்டும்
கண்ணியம் மிக்கதோர்
கற்புக் கரசியே
மண்ணுலகம் வாழ்த்த
எண்ணியதை எய்துவோம் கைகோர்த்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக