ஞாயிறு, 22 அக்டோபர், 2017

படக்கவிதை ==சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா-21-9-17

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம்21/09/2017ம் நடத்திய .
படம் பார்த்து கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற
கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் : கவிஞர் . சேகுஇஸ்மாயில் முகம்மது மஸ்ஊத்
அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் தலைவர் சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
ஆனைக்கட்டி போரடித்த
காலமொன்று உண்டு
அரசவையிலும் கூட
ஆனைப்படை உண்டு
ஆனைப்படையெல்லாம் இன்று
பூனைப்படையாக மாறிப்போச்சு
இலங்கையிலே துப்பாக்கிச் சூட்டுக்கு
இலக்காகி இறந்துபட்ட தன் இனத்துக்காக
இங்கே சங்கிலி போராட்டம் நடக்குதோ? இல்லை
அரசியல்வாதியின் வருகைக்காக நடக்கும்
அணிவகுப்போ ? யாரறிவார் ?ஆனாலும்
ஆனைப்படையை அதிசயமாய் பார்ப்பார் அனைவருமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக