ஞாயிறு, 22 அக்டோபர், 2017

4-9-2017 நதியோர நாணல்கள் கவி வடிவில் காதல் கடிதம்

கவி வடிவில் காதல் கடிதம்!
$$$$$$$$$$$$$$$$$$$$$$
#காதலனாகி_காதலிக்கு
04.09.2017 இல் பதில் மடல் வரைந்து வெற்றி பெற்ற கவிஞா்களின் விபரமும் சான்றிதழ்களும்.
கவி வடிவில் காதலன் கடிதம்
இனியவளே உன்
இனிய மடல் கண்டேன்
இன்பம் கொண்டேன்
உன் நினைவாலே
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும் எப்போதும்
தப்பாத தாளங்கள்
சோலைக்கிளிகள் போல
சோடியாய் நாம் சுற்றி வந்தோம் அந்த
சுகமான நினவுகளை மென்றே
அகம் குளிகிறேன் இன்றும்
கடற்கரை மணலில்
கால் புதைய புதைய நடந்தோம்
கைகோர்த்தபடியே கனவுகளில்மிதந்தபடி
எனக்காகவே பிறந்தவள் நீ
என எக்காளமிடுகிறது மனது
மனம் திறந்த உன் பேச்சும்
மலர்ந்த முகமும் நிழலாடுகிறது எப்போதும்
உன் நினைவுகளே உள் நெஞ்சில் உலவுவதால்
உறக்கத்தில் கூட உறங்கா கனவுகளாய்
உன்மத்தம் பிடித்தலைகிறது
கடிதம் மூலமே எத்தனை நாள் உறவாடுவது என
கலங்காதே கண்ணே காலம் கைகூடும்
உறவுகள் கூட ஊரார் பாராட்ட
உன்னை மணம் முடிக்க இன்னும் ஓரிரு மாதங்களில்
ஓடோடி வருகிறேன் அதுவரையில்
உன் அன்புக் கடிதங்களால்
எனக்கு புத்துணர்ச்சி தருக
பாலையில் பசுமை தருவதே உன் மடல்கள்தான்
தொடருட்டும் படருட்டும் பாச கடிதங்கள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக