ஞாயிறு, 22 அக்டோபர், 2017

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா -17-9-17--விழியே மனதின் கதவாக

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் 17/09/2017ம் நடத்திய விழியே மனதின் கதவாக எனும் தலைப்பில் காதல் கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற
கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் : கவிஞர். நிலாச் சந்தர் . ந. பாண்டியராஜன்
அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் தலைவர் சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
விழியே மனதின் கதவாக
வழியே நுழைந்தேன் பதமாக
பொழிவாய் காதலை இதமாக
மொழியாய் ஏற்பேன் வேதமாக
தீயாக உன் நினைவு எரிக்கிறது தேகத்தை
நீராக வந்து அணைத்து விடு தாகத்தை
எழிலாகவந்து நீ போகிறாய் மேகமாய்
என்னவளே மோகம் தீர வந்திவிடு வேகமாய்
தேன்பாயும் சோலைஇளம் தென்றல் வேளை
மான் போல துள்ளி மயக்குறியே தன்னாலே
கண்ணே நீ ஓடி விளையாட வாராய்
பண்பாடி ஜோடி கிளிகளாய் பறப்போம்
தூங்காத கண்களால் தினமும் உன்னை
நீங்காமல் உன்னையே காண்கிறேன் நானே
தாங்காது இனியும் என் மனது பெண்ணே
ஏங்க வைத்து என் உயிர்போக்கி பழி ஏற்காதே
விழிதானே மனதின் கதவு
விழிவழியே வந்து உதவு
ஓரவிழியாலே சாய்த்துவிட்டு என்னை
ஒருவழி பாதையென்று சொல்லி நீக்கிடாதே
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக