ஞாயிறு, 22 அக்டோபர், 2017

சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா--28=8-2017-அருவிக்கரையோர அழகிகளே

28-08- 2017 அன்று நடந்த படக் கவிதைப்போட்டியின் வெற்றியாளர் சான்றிதழ்கள் . சிறப்பாக நடுவர் பணியாற்றிய கவிதாயினி வெ . தமிழரசி அவர்களுக்கு சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.
அருவிக்கரையோர அழகிகளே
பாலைவன பசுமைகளே
பால் வடியும் பாவைகளே
அருவிக்கரையோர அழகிகளே
குருவிக் கூட்டம் போல கூடுதிங்கே
அடுக்கடுக்காய் குடங்கள் தலையில்
அமர்ந்திருக்கும் அழகு இடையில் ஒன்று
காததூரம் நடந்திடுமே நீருக்காக
கவலை மறக்க சிரித்து பேசி நடக்குமே
கைகளிலே வளையல் அடுக்குகள்ஜதி போட
கால்களில் தண்டை தாளம் போடும்
முழுமதியை மறைக்கும் வான் மதிபோல்
முக்காடு முகம் மறைக்கும் அழகுதான்
கட்டழகை கலர் ஆடை தழுவி நிற்க
வட்டமிடும் கண்கள் இரண்டும் அலைபாயும்
தேரில் உள்ள சிற்பம்போல் ஆடி அசையும்
தேவதைகள் கூட்டமிங்கு நீருக்காக அலையுது
அருவிப் போல அவள் சிரிப்பொலியில்
உருகிப் போனேன் நானுமே மெழுகாய்
நித்தம் போகும் அவள் காலடியில்
முத்தமிடும் கடல் அலையானேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக