ஞாயிறு, 22 அக்டோபர், 2017

27-7-2017-சங்கத்தமிழ்ப் பூங்கா-படப்போட்டி

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 27/07/2017நடந்து முடிந்த படம் பார்த்து கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்கள் சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் கவிஞர் பால கார்த்திகேயன்
அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் தலைவர் சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
அந்தி வானம் சிவந்து நின்று பளபளக்க
அலைகளெல்லாம் அமைதியுடன் ஓய்ந்திருக்க
தென்னை மரங்கள் சிலிர்ப்புடனே தலை அசைக்க
தென் கதிரோன் மெல்ல மெல்ல கடலில் கரைந்தான்
கூடு விரையும் பறவைகளின் படபடக்கும் ஓசையும்
வீடு திரும்பும் காதலர்களின் கல கலப்பும்
ஆனந்த உலகம் அந்தி சாயும் நேரம்
ஆராதிக்கும் மனமே இயற்கையின் அழகை
இயற்கை வரையும் கவிதைகள் என்றும்
இளமை நினைவை இசைக்கும் இனிய ராகங்கள்
இனிதாக மயங்க வைக்கும் மானிடரை அந்த
இயற்கை மேல் இச்சை கொள்வோம் நாமே
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக