ஞாயிறு, 22 அக்டோபர், 2017

சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா==9-8-2017--வீசு கமழ் நீ எனக்கு

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 09/08/2017நடந்து முடிந்த காதல்
கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற
கவிஞர்களுக்கு அப்துல் சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர் : கவிஞர் ரசி குணா
அவர்கள்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் தலைவர் சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகள்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
வீசு கமழ் நீயெனக்கு
விரியும் மலர் நானுனக்கு
வீணையடி நீ யெனக்கு
வீசு தென்றல் நானுக்கு
திகட்டாத கவிதை நீயெனக்கு
தேன் மலர் வாசம் நானுக்கு
மேகத்தின் நிலவு நீயெனக்கு
மோகத்தின் நாயகன் நானுக்கு
அழகு மொழி நீயெனக்கு
பழகு தமிழ் நானுக்கு
சூடிக்கொடுக்கும் சுடர் நீயெனக்கு
சூட்டிக்கொள்ளும் மாதவன் நானுக்கு
சுழற்றும் சாட்டை நீயெனக்கு
சுற்றுகிற பம்பரம் நானுக்கு
காதல் தந்தாய் நீயெனக்கு நல்
கவிதை தந்தேன் நானுக்கு
பாவையென்றும் நீயெனக்கு
பதியானேன் நானுனக்கு
பாடுபொருள் நீயெனக்கு
பாவலனானேன் நானுனக்கு
ஆடும் மயில் நீயெனக்கு
பாடும் குயில் நானுனக்கு
முகில் இனம் நீயெனக்கு
முகவரி என்றும் நானுக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக