வெள்ளி, 12 மே, 2017

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி யே. வானம் அறிந்த தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழிய வே.
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்காவில்
27/3/17ம் நாள்
நடந்து முடிந்த மரக்கிளையில் தூளி கட்டி எனும் தலைப்பில் கிராமியகவிதைப் போட்டடியில்
கவிதை எழுதி தேர்வான கவிஞர்
களுக்கு சிறப்புச்சான்றிதழ் வழங்கி
கெளரவிக்கப் படுகின்றார்கள்
கவிதை எழுதிய அனைத்து பாவலர்களுக்கும் வாழ்த்துக்கள்
சிறப்பான கவிதைகளை தேர்வு
செய்த நடுவர் கவிஞர் சேகு இஸ்மாயில் முகம்மது அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
தலைமை நிர் வாகி ந. பாண்டியராஜன் **
மரக் கிளையில் தூளிகட்டி
மரக் கிளையில் தூளி கட்டி பூ
மரத்து நிழலில் உன்னை இட்டு
தென்னாட்டு மன்னவனே
அன்னை உன்னை தாலாட்டறேன்
கண்ணின் கருமணியே
கன்னக் குழியழகா
உன்னைப் பார்க்கையிலே
என் கவலையெல்லாம் மறந்து போகும்
வம்சம் தழைக்க வந்த
அம்ச நாயகனே நீ உறங்கு
சீமைக்குப்போன உன் மாமன்
சீனாபொம்மை வாங்கி வருவான்
அத்தையும் வந்திடுவாள்
அழகான சிலுக்கு சட்டையுடன்
வேலைக்குப்போன உன் அப்பா
வீடு திரும்பும் நேரமாச்சு
அப்பா உனக்கு சீனி மிட்டாய்
தப்பாம தின்ன வாங்கி வருவார்
தென்றல் தந்த சீதனமே நீ உறங்குஎன்னைத்
தேடி வந்த சீராளா நிம்மதியாய் நீஉறங்கு
சரஸ்வதிராசேந்திரன்
*******************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக