வெள்ளி, 12 மே, 2017

செய்யுட்கலைச்சூடிகை


என் பொழுது விடியாமல்
போனது நாளும்
உன்னிடம் அடகு வைத்த மனதை
என்னால் மீட்க முடியாததால்தானே
நான் பித்தனானேன்
ஊமை கண்ட கனவாய்
உள்ளுக்குள் வலிக்கிறது
உன் மயிலிறகு தடவல் விழைகிறது
கனவு கொடுத்த நீயே
என் உறக்கம் கலைக்கலாமா?
கண்ணே
உன்னிடம் வைத்த அன்பில்
நானொரு ஆலமரம் ஆம்
சூறைகாத்து வீசினாலும் சாயமாட்டேன்
பனித்துளியாய் நீ வீழ்ந்தாலும்
பூவான நான் உடையமாட்டேன்
புன்னகையுடன் காத்திருப்பேன்
அதென்னவோ நீ என்ன பேசினாலும்
எனது மண்டையில் ஏறுவதில்லைஉன்னை
முழுமையாய் ஏற்றதால்
உன் நினைவுகளில் கரைந்தே
என் கவிதைகள் உலவும்
என் நெஞ்சிருக்கும் வரை
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக