வெள்ளி, 12 மே, 2017

தமிழமுது கவிச்சாரல்


இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
- பாவேந்தர்
வணக்கம் பாவலர்களே #கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ்...
தமிழமுது_கவிச்சாரல்_குழுமத்தின் 8--3--17 நாளாம் போட்டி கவிதையின்
#தலைப்பு__#பெண்ணின்_மானமும்_வீரமும்
வெற்றியாளர் #கவிஞர்_சரஸ்வதிராசேந்திரன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்
#கவிதாயினி_கவி_இமயம்___உஷா_ராணி நடுவராக பங்கேற்று சிறப்பான கவிதையை தேர்வு செய்தமைக்கு அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
#கவிஞர்_கண்ணதாசன்_சிறப்புச்_சான்றிதழ்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
பெண்ணின் மானமும் வீரமும்
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திட வேண்டுமென்றார் எதற்கு?
பொறுமையாய் இருந்திடும் பெண்களை
பெருமையாய் பேசிடுவார் துன்பத்தை பொறுத்துக்கொள்வதால்
பேதமை நிறைந்தவள் என்று சொல்லி
பேச்சுரிமையைப் பறித்திடுவார்
அடுப்படியே கதியென்று
அடக்கி வைத்திடுவார்
போகமாய் பெண்ணை எண்ணிடுவார்
மோகத்தில் அவளைத் தள்ளிடுவார்
போதும் பெண்ணே அடிமைபட்டது
வீரத்தை மனதில் ஏற்றிடடி
வீழ்ந்துகிடந்தது போதுமடி
புரட்சியை மனதில் ஏற்றுங்கடி
புனிதப்பணியிலே போரிடுங்கடி
வீரமும் மானமும் என்றும்
மாதரின் அணிகலங்கள்
மறக்காமல் அதை எடுத்துச் சூடுங்கள்
அடங்கி இருப்பது பெண்ணின் அடக்கம்தான்
அடக்கி வைப்பது ஆணின் ஆணவம்தான்
தொடர்கதை போதும் பெண்ணே
துயரத்தை அறிவால் துணிவால் வெல்லுங்கள்
பெண்ணின் வீரத்தையும் மானத்தையும்
கண்டு உலகமே பெண்ணுக்கு சம உரிமை கொடுக்கட்டும்
சரஸ்வதிராசேந்திரன்
#தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகத்தினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக