வெள்ளி, 12 மே, 2017

கவியருவி

கவியருவி
பூந்தளிர்
பெற்றவர்கள் மோகத்தின் உச்சம்
பிறந்ததது உயிரின் மிச்சம்
பூந்தளிர் வரவினால்இல்லத்தில்
பூந்தென்றல் வீசி வீடுசெழிக்கும்
மொச்சக்கொட்டைக் கண்ணால்
முழிச்சு முழிச்சு பார்க்கும்
குட்டைகாலையும் குட்டை கையையும்
சட்டையைப்போட்டால் ஆட்டும்
பிஞ்சு பாதங்களினால்
நெஞ்சில் அது உதைக்கும்
கொஞ்சி முத்தமிட்டால்
மூஞ்சியையே அது நக்கும்
அள்ளி அள்ளி அணைக்கையில்
துள்ளித் துள்ளி குதிக்கும்
கிள்ளி வச்ச முல்லைப்போல
கையில் வாசம் வீசும்
தாயின் நெஞ்சம் தானே
சேயின் தங்கத் தொட்டில்
தாவித்தழுவும் தோளை
ஆவி துடிக்கும் அன்பால்
மழலை இல்லா வீடு
மழை இல்லா வெடித்த வயற்காடு
கோடிசெல்வம் இருந்தாலும்
தேடக்கிடைக்கா தெய்வப்பரிசு
ஆக்கம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக