வெள்ளி, 12 மே, 2017

முத்துக்கமலம் மின்னிதழ்


March 18

கண்ணே மணியே கற்கண்டே
மின்னும் அழகே பொன்வண்டே
உந்தன் கண்கள் மீனினமோ
எந்தன் மகள் நீ தேனீனமோ
சின்ன சிரிப்பின் தந்திரமேஎன்
சினத்தை அடக்கும் மந்திரமே
அன்ன நடையே உன் நடை உன்
சின்ன இடையே சிறு தேரே
உன் மழலைக் கிள்ளையே
உன் பல்வரிசை முல்லையே
விந்தை புரிகிறாய் நான்றியாமல் என்
சிந்தனைச் சுடரே நீ தானே
எங்கள் வீட்டு தேவதையே
என்றும் திகழ்வாய் ஓவியமாய்
- சரஸ்வதி ராசேந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக