வெள்ளி, 12 மே, 2017

கவியருவி மின்னிதழ்

மரபு குறுங்கவிதை....
(வஞ்சி விருத்தம்)
நடுவர் : கவித்தீபம் நாகினி
21.3.2017 வரை வஞ்சிவிருத்தம் பாக்கள் படைத்து
மரபு குறுங்கவிதையில் கவியருவி மின்னிதழை அலங்கரிக்கும் வெற்றியாளர்...
*
*சரஸ்வதி இராஜேந்திரன்
*கவிமுரசு. நிலாச் சந்தர் (ந. பாண்டியராஜன்)
கவிஞர்களுக்குச் சான்றிதழ் வழங்கிப் பாராட்டி மகிழ்கிறோம். வாழ்த்துகள் அனைவருக்கும் !
இவண்,
கவியருவி நிர்வாகம்
வஞ்சி விருத்தம்
தலைப்பு-- மழலை
புலர்ந்த புதிய பொழுதாய்
மலர்ந்த மலராய் மழலை
உலர்ந்த உரிய உணர்வே
அலர்ந்த அழகு மலரே
அன்ன நடை அழகை
கன்ன குழியால் கவர்ந்து
என்னை தொட்ட எழிலே
சின்ன குயிலே இசையே
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக