வெள்ளி, 12 மே, 2017

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
வணக்கம் கவி உறவுகளே..
சங்கத்தழிம் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 13/04/2017 நாள் நடந்து முடிந்த படம் பார்த்து கவிதை எழுதும் போட்டியில், கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்: கவிஞர் ப.ஜெகதீஸ்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்
படப்போட்டி சிறப்புச்சான்றிதழ்
மூட்டை மூட்டையா விளையுமின்னு
முழு மனதோடு விதை விதைச்சேன்
விதை விதைச்ச நாளிலிருந்து
வித்தை காட்டுது மேகமும்தான்
வான் மழை பெய்யாவிட்டால்
வறுமையும் பசியும் நீங்கிடுமா
அடகு வச்ச நகையெல்லாம்
அடங்காம வட்டி சேர்ந்து நிக்குது
கடன் அடைக்க வழியில்லே
வயிறு பசிக்கும் உணவில்லே
எலியைப்பிடிச்சு திங்கறோம்
வலியோடு அரசை வேண்டுறோம்
குட்டிக்கரணம் போடுறோம்
பட்டி தொட்டியெல்லாம்
அம்மணமா ஓடுறோம்
அப்பவும் மனம் இரங்கலே அரசு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக