வெள்ளி, 12 மே, 2017

கனடா டிவி

கனடா டிவியில் இதயராகம் நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட என் கவிதை மார்ச் 16=3--2017 மணி 7.45
வெண்பனிக் காலை சந்தங்கள் பாட
சந்தனக் காற்றும் சாமரம் வீச
வந்தனள் மாது இவளொரு பூங்கவிதையாய்
தந்தனள் தமிழ்ப்பாட்டு அதுவே எனக்கு
சந்தோஷப் பாட்டு அதைக் கேட்டு நான்
செந்தமிழ்ச் சாரலில் நனைந்தேன்
முத்துச்சர விளக்கே முத்தம் சிந்த வா                                                                                           நீ மொத்தமாய் என்னை ஆட்கொண்டுவிட்டாய்
வஞ்சி என்னை வதைக்காதே
கொஞ்சி என்னை சிதைக்காதே
காதல்;எனும் தேன் குடத்தை ஏந்தி வா
காலங்கள் இன்னும் கண் மூடவில்லை
ஆழ்கடலோ பெண்ணே உன் மனம்என்னை மோகத்தில்
மூழ்கிடச்செய்கிறாயே நியாயமா சொல்
உன் நினைப்பாலே தினந்தோறும் தொல்லை
உன் புன்னகை என்னை அனல் போல் தாக்குதே
காதில் எல்லாம் வாங்கிட்டு காற்றில் பறக்கவிட்டு என்
சாதலுக்கு நீ காரணமாகாதே வந்துவிடு
உன் காதலைச்சொல்லிவிடு என் அன்பே
சரஸ்வதிராசேந்திரன்
மன்னார்குடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக