எட்டு வண்ண வானவில்
எட்டாத தூரத்தில் அழகு காட்ட அதை
தொட்ட ணைக்க ஆவல் ஊற அது
தொடு வானமாகிப் போச்சு
எட்டாத தூரத்தில் அழகு காட்ட அதை
தொட்ட ணைக்க ஆவல் ஊற அது
தொடு வானமாகிப் போச்சு
வெட்ட வெளியில் நிற்கிறாய்
வில்லைப் போல வளைந்து நீ
எட்டி உதைக்கும் குழந்தையாய்
பட்டனெவே மறைகிறாய்
வில்லைப் போல வளைந்து நீ
எட்டி உதைக்கும் குழந்தையாய்
பட்டனெவே மறைகிறாய்
உதயமாகும் போதெல்லாம்
இதயம் விம்மி நெகிழ்கிறேன்
சதம் நீயே என நாளும் நம்பி
இதமாக சுற்றும் நானொரு தும்பி
இதயம் விம்மி நெகிழ்கிறேன்
சதம் நீயே என நாளும் நம்பி
இதமாக சுற்றும் நானொரு தும்பி
மேனிவில்லை வளைத்தே நீ
மோகக்கணை தொடுக்கிறாய்
உன்னோடு விளையாட நினைக்கும்
என்னோடு நீயாட ஏன் மறுக்கிறாய் ?
மோகக்கணை தொடுக்கிறாய்
உன்னோடு விளையாட நினைக்கும்
என்னோடு நீயாட ஏன் மறுக்கிறாய் ?
தொட்டு விட வழியுமில்லை
விட்டுவிட மனமு மில்லை
பட்டெனவே மறைகின்றாய்
எட்டு வண்ண வானவில்லே
விட்டுவிட மனமு மில்லை
பட்டெனவே மறைகின்றாய்
எட்டு வண்ண வானவில்லே
வண்ணத்தை எங்கு பிடித்தாய்
வண்ண மயில் தோகையிலா?
எண்ணத்தில் நீயிருந்தால் என்றும்
என் எழுத்துக்குப் பஞ்சமில்லை
வண்ண மயில் தோகையிலா?
எண்ணத்தில் நீயிருந்தால் என்றும்
என் எழுத்துக்குப் பஞ்சமில்லை
புன்னகை புரிகையிலே என்னுள்
பூமழை பொழிகி்றது பெண்ணே
தேனென தித்திக்குது என் மனமே நீ
தரிசனம் தருகையிலே எட்டாத வான வில்லே
பூமழை பொழிகி்றது பெண்ணே
தேனென தித்திக்குது என் மனமே நீ
தரிசனம் தருகையிலே எட்டாத வான வில்லே
சரஸ்வதிராசேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக