வெள்ளி, 12 மே, 2017

சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா

Like This Page · May 6Edited 
 
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 28/04/2017நடந்து முடிந்த
பாரதிதாசன் தலைப்பு பாவேந்தர் வாழியவே
எனும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்க களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்கள்:
கவிஞர் கவிஞர் கோவிந்தராஜன் பாலு
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்

பாவேந்தர் வாழியவே

புதுவையின் புரட்சிப்பிறப்பே
பாரதியிடம் பற்றுகொண்டு
பாரதி தாசன் என்று பெயர் சூட்டிக்கொண்ட பாவேந்தர் வாழியவே

திறம் பட பாடவந்த கவிஞன் புதிய
அறம்பாட வந்த அறிஞன் அவன்
அனுபவப்பாடலோடு நகைச்சுவையும் கலந்துதரும்
உள்ளத்தைத் தொடும் உணர்ச்சிக்கவிஞன்

புதியதோர் உலகம்செய்வோம்கெட்ட
போரிடும் உலகத்தைவேரோடுசாய்ப்போம்
தமிழுக்கு அமுதென்றுபெயர் அந்த தமிழின்பத்
தமிழெங்கள் உயிருக்கு நேர்
பாடல் தந்த பாவேந்தர் வாழியவே

பெரியாரின் தீவித்தொண்டராகி
திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு
கடவுள் மறுப்பு சாதி மறுப்பு மத எதிர்ப்புகளை
கவிதைமூலம் பதிவு செய்த புரட்சிக்கவிஞன்

தமிழ் ஒரு அழகிய பூக்காடு என்றும்
தன்னை வட்டமிடும் தும்பியாக உருவகப்படுத்தியவர்
தமிழை தன் உயிரோடு இணைத்துப் பாடிய
பாவேந்தர் வாழியவே

சரஸ்வதி ராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக