வெள்ளி, 12 மே, 2017

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
கவி உறவுகளே..மனதினிய முதற்கண் 
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
சங்கத்தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமத்தில் 25/04/2017 நடந்து முடிந்த எழுதிச் செல்லும் விதியின்கையில் எனும் பாரதிதாசன்
கவிதை எழுதும் போட்டியில், கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்: கவிஞர் மதுரா
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்
பாரதிதாசன் சான்றிதழ் போட்டி
எழுதிச்செல்லும் விதியின்கைகளில்
நழுவிப் போகும் மனித வாழ்க்கை
ஜனனம் என்பது ஒரே மாதிரிதான்
மரணம் என்பது பல வழிகளில் நிகழும்
வாழ்க்கை என்பது ஒரு முறைதான் அதை
வாழ்ந்து தீர்ப்பதே மனித நடைமுறை
விதியை எண்ணிக் கலங்காதே
வீணில் கவலை கொள்ளாதே
அறுந்த பட்டம் வானில் அலைக்கழிவதுபோல்
உடைந்த பாய்மரம்கடலில் சிக்குண்டதுபோல்
சூறைக்காற்றில் காகிதம் சிக்கியதுபோல் வெல்லும் நோக்கமின்றி வீணில் கிடப்பது முறையாமோ ?
சோதனை வேதனை வென்றுவிடு
சாதனை படைக்க எழுந்து விடு
விதிப்படி நின்று விளைந்ததைக்கொண்டு
மதிபடி வாழத்தொடங்கி விடு
கைக்குள் அடங்கா காரியம் எண்ணி
கவலைகொள்வதில்அர்த்தமில்லை
வருவது வரட்டும் எழுந்து விடு
வரும்வரை வாழ்க்கையை வாழ்ந்துவிடு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக