வெள்ளி, 12 மே, 2017

கனடாடிவியில் வாசிக்கப்பட்டது

வீசு கமழ் நீயெனக்கு
விரியும் மலர் நானுனக்கு
வீணையடி நீ யெனக்கு
வீசும் தென்றல் நானுக்கு
திகட்டாத கவிதை நீயெனக்கு
தேன் மலர் வாசம் நானுக்கு
மேகத்தின் நிலவு நீயெனக்கு
மோகத்தின் நாயகன் நானுக்கு
அழகு மொழி நீயெனக்கு
பழகு தமிழ் நானுக்கு
சூடிக்கொடுக்கும் சுடர் நீயெனக்கு
சூட்டிக்கொள்ளும் மாதவன் நானுக்கு
சுழற்றும் சாட்டை நீயெனக்கு
சுற்றுகிற பம்பரம் நானுக்கு
காதல் தந்தாய் நீயெனக்கு நல்
கவிதை தந்தேன் நானுக்கு
ஆடும் மயில் நீயெனக்கு
பாடும் குயில் நானுனக்கு
முகில் இனம் நீயெனக்கு
முகவரி என்றும் நானுக்கு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக