வெள்ளி, 12 மே, 2017

சங்கத்தமிழ்

நல்லதோர் வீணை செய்தே
நேர்த்தியாய் அதை இசைத்து
தாய் நிறை அன்பாலேபொழுதும்
தாங்கி வளர்த்து பண்பாக்கினாள்
உலகினை வெல்லும் ஒரு சக்தி
நிலவென சுழன்றடிக்கும் காதல்
இழுத்த ஈர்ப்பால் அவனின் பேச்சில்
வழுக்கி வீழ்ந்தாள் அந்த பேதை
பெற்றவரை எதிர்த்து அறிவை இழந்து
மர்றவரின் சொல் கேளாமல்செயல்பட்டாள்
தேடாது அடைந்த தெய்வீகக் காதல்
சுடிக்கொண்டாள் சுடர்க்கொடி
உச்ச நிலையில் உயர்ந்தவளை
கொச்சைபடுத்தினான் கொண்டவன்
உளத்தினில் வேறுபாடு உதட்டில் உறவு
நலமிழந்த வாழ்க்கைத்துயர் கொண்டாள்
நல்லதோர் விணை செய்து அது தானே
நலம் கெட புழுதியில் வீழ்ந்ததை
எண்ணியெண்ணி அழுதாள் தாய்
எண்ணாமல்மகள் தேர்ந்தெடுத்த உறவால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக