வெள்ளி, 12 மே, 2017

கவியருவி மின்னிதழ்

தெம்மாங்குப் பாடல்கள் ...
நடுவர் : கவிஞர் கனகரத்தினம் செல்லமுத்து
17.3.2017 வரை தெம்மாங்குப்பாடல்கள் படைத்து
கவியருவி மின்னிதழுக்குத் தேர்வாகியுள்ள..
*Saraswathi Rajendran
தெம்மாங்குக் கவிஞர்களுக்குச் சான்றிதழ் வழங்கிப் பாராட்டி மகிழ்கிறோம். வாழ்த்துகள்!
இவண்,
கவியருவி நிர்வாகம்.
தெம்மாங்கு பாட்டு
எல்லாமே மாறிப்போச்சு
முப்போகம் விளைஞ்ச பூமி தங்க ரத்தினமே
மூளியா கிடக்குதடி தங்க ரத்தினமே
விளை நிலமெல்லாம் இப்போ தங்க ரத்தினமே
விலை நிலமா ஆகிப்போச்சு தங்கரத்தினமே
ஆற்றிலே நீரும் அற்றுப்போச்சு தங்க ரத்தினமே
சோற்றுப்பாடே திண்டாட்டமாயிடுச்சு தங்கரத்தினமே
வானமும் கை விட்டுடுச்சு தங்கரத்தினமே
விவசாயமே விட்டுப்போச்சு தங்கரத்தினமே
தெருக்கூத்து வில்லுப்பாட்டு அழிஞ்சுபோச்சு தங்கரத்தினமே
திரைப்படமே அங்கும் ஆக்கிரமச்சாச்சு தங்கரத்தினமே
வடை பணியாரம் இடத்தைஎல்லாம் தங்கரத்தினமே
வட்டமான பீசாக்களும் கேக்கும் பிடிச்சிடுச்சு தங்கரத்தினமே
மூங்கில் கூடை மண்பாண்டத்தை தங்கரத்தினமே
மூவண்ண பிளாஸ்டிக் பிடிச்சாச்சு தங்கரத்தினமே
பாரம்,பரிய உற்பத்தியாளர்களின் தங்கரத்தினமே
பயன்பாட்டு பொருட்கள் எல்லாம் மாறிப்போச்சு தங்கரத்தினமே
உழவுத்தொழில் அழிஞ்சுபோச்சு தங்கரத்தினமே
அழுதழுது ஆதங்கமாச்சு தங்கரத்தினமே
மேலை நாட்டு நாகரீகத்தில் தங்கரத்தினமே
மோகம் கொண்டு மோசம் போனோம், தங்கரத்தினமே
சரஸ்வதிராசேந்திரன்
Kalam Shaick Abdul Kader அருமை
கவிமலர் கவிமலர்
கவிமலர் கவிமலர் ஆஹா !!! :)
கவிஞர் கனகரத்தினம் செல்லமுத்து
கவிஞர் கனகரத்தினம் செல்லமுத்து தாளம் போட வைக்கிறியே தங்க ரத்தினமே!
ஏகத்தாளம் போனதெங்கே தங்கரத்தினமே
தெம்மாங்கு கவிதையிது தங்கரத்தினமே
சிறப்பாக இருக்குதம்மா தங்கரத்தினமே!!
Saraswathi Rajendran கவிமலர் கவிமலர் நன்றி
Like · Reply · 1 · March 14 at 10:31am
Saraswathi Rajendran கவிஞர் கனகரத்தினம் செல்லமுத்து நன்றி
Saraswathi Rajendran Kalam Shaick Abdul Kader நன்றி
விஜயகுமார் வேல்முருகன்
விஜயகுமார் வேல்முருகன் பழசு எல்லாம் மாறிப்போச்சு தங்கரத்தினமே
புதுசால இப்ப எல்லாம் நாரிப்போச்சு தங்கரத்தினமே..
அருமை அம்மா
நன்றி விஜய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக