வெள்ளி, 12 மே, 2017

கவியருவி

'உழைப்புத் தருமே மதிப்பு'.. புதுக்கவிதை
வெற்றியாளர்: கவிஞர்
சரஸ்வதி ராஜேந்திரன்
உழைப்புத் தருமே மதிப்பு
உழைப்புத் தருமே மதிப்பு
உணர்ந்தவருக்கே அது தரும் களிப்பு
உழையாதவன் படுவான் பெருமிழப்பு
உழைப்பே பிறப்பின் சிறப்பு
பலன் பெற வாழ்வோம் உழைத்து
பிழையற்று வாழ்வோம் பிழைத்து
உழைத்துப் பிழைப்பவன் உயர்வான்
பிழைக்கும் பிழைப்பில் நிமிர்வான்
உழைக்கும் உழைப்பே வரலாறாகும்அது
பிழையிலா பேரின்ப நல் பேறாகும்
வாழ் நாள் முழுதும் உழைத்தாலே
பாழ்படும் நிலைமை வாராதே
வாழும் வாழ்க்கை வளமாக வேண்டின்
தாழ்வுமனம் கொள்ளாது உழைத்திடுக
மானமிகு வாழ்க்கை உழைப்பில் உள்ளது
ஏனைய துன்பம் அதில் என்றும் இல்லை
அழகிற்கு அழகாம் அமைதி வாழ்க்கை
அழியாமல் காக்க உழைத்து வாழ்
உழைப்பே வாழ்வின் உறுதுணையாம்
உயர்ந்த எண்ணம் உளம் கொள்க
உண்மை உழைப்பை உறுதியாய் கொள்
ஊதாரித்தனத்தை உதறியே தள்
உழைப்புத் தருமே மதிப்பு
வழிவழிவாரிசுக்கு தந்திடு இந்த பதிப்பு
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக