வெள்ளி, 12 மே, 2017

கவியுலப்பூஞ்சோலை

குறிஞ்சியாய் பூத்திடும் உன் பதிலுக்காய்
கூடை நிரம்பிய மல்லிகையாய் என்
கேள்விகளோ பல நூறு..........
குறை தீர்க்கும் வார்த்தை தேடிடும் என்
கோரிக்கையோ ஒன்றே ஒன்று......,
கொஞ்சு தமிழ் எடுத்து அதில் கூட்டி காதல் குழைத்து
பிஞ்சு முகம் பார்த்து நெஞ்சு நெகிழ பேசியது மறந்தனையோ
காற்றாகி வந்த புயல் காலனென மாறலாமோ
நேற்றாகிப் போன கதை நீ மறந்து போனதுவோ
ஊற்றாகி வந்து உதிர்ப்பாய் உன் நல் பதிலை
கடைக்கண் பார்வையிலும்
கண நேரப் பேச்சிலும்
என்மனதை அடகு வைத்து
வலம் வந்து நின்றேன் நீ
நலம் தருவாய் என்று
குறிஞ்சியாய் பூத்துவிடு நெருஞ்சியாய் மாறாமல்
என் சோகத்தை எல்லாம்
வார்த்தைகளில் சேர்த்து கோர்த்துவிட்டேன்
வேர்த்திடும் என்னை வியத்திட வைப்பாய்
கோரிக்கையுடன் நிற்கிறேன் வேரில் பழுத்த பலாவாய்
குறை தீர்க்கும்
வார்த்தையால் என்னை குளிரவை பாலாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக