வெள்ளி, 12 மே, 2017

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
வணக்கம் கவி உறவுகளே..
சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 12/04/2017நடந்து முடிந்த காதல் கவிதை தலைப்பு உனக்காகவே நான்
வாழ்கிறேன் எனும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்: கவிஞர் சுமதி சங்கர்
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்
உனக்காகவே நான் வாழ்கிறேன்
பூங்குயில் வார்த்தையில்
பொன்மயில் ஜாடையில்
காந்தக் கண்களால்
கவர்ந்திழுத்து கட்டுக் கதைகள் சொல்கிறாய்
உன்னிடத்தில் நான் மயங்கியதால்
ஊருக்கேப் பகையானேன்
என்னாவியே கண்ணே உன் போலே
மண் மீதில் வேறு பெண்ணேதம்மா ?
உன்னுயிராய் நானிருப்பேன் என்னுயிரே
உனக்காகவே நான் பிறப்பெடுத்தேன் மானே
இன்னமும் ஏன் என்னை வாட்டுகிறாய்
இதயத்தில் தீயை ஏன் மூட்டுகிறாய்
நாள் கணக்கா உன்னை எண்ணித்தான்
நான் தவிக்கிறேன் சின்ன மானே
கண்ணும் கண்ணும் கலந்ததால் தானே
இன்னமும் நீ வேண்டுமென என் மனம் நாடுது
கண்ணான ஜோதியில் நான்
கலப்பது எக்காலம்
பெண்ணே நீ சொல்லிவிடு
உனக்காகவே நான் வாழ்கிறேன்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக