வெள்ளி, 12 மே, 2017

கவிதை

ஆதாம் ஏவாள் பாடமும்
புத்தனின் ஞானமும்
புத்தியில் ஏறவில்லை
அலைபோல் ஆசைகள்
நிலை தடுமாறவைக்கும்
நிம்மதி இழக்கும்
முறை தவறிபோகும்
தறி கெட்டு ஓடும்
கறை படிந்து நிற்கும்
அளவற்றுப் போனால்
களமற்றுப் போகும்
களங்கம் சேரும்
குணம் கெட்டுப்போகும்
மனம் அமைதி இழக்கும்
தினமும் அல்லல்தான்
கொள்ளை ஆசை கொண்டாலே
கூண்டோடு குடும்பத்தை
குழியிலே தள்ளும்
எளிமைமிகு வாழ்க்கை
ஏற்றமுறச்செய்யும்
எழிலுடன் விளங்கும்
பொல்லாத ஆசைகளால்
பொல்லாங்குதான் மிஞ்சும்
நில்லாது அழியும் வாழ்க்கை
உள்ளத்தின் ஆசைகளை
உதறிய பின்னே
நிலைத்திடக்காண்பாய் அருள்
அழிவதற்கா நாம் பிறந்தோம்
ஆறறிவும் பெற்றோம்
ஆசை அறுத்து வாசமாய் வாழ்வோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக