வெள்ளி, 12 மே, 2017

சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழி யே.
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே..
வணக்கம் கவி உறவுகளே..
சங்கத்தழிம் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 14/04/2017புத்தாண்டுப் புதுமலரே பூம் புனலாய் நீ வருக ப எனும் தலைப்பில் பாரதிதாசன் கவிதைப் போட்டியில், கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..
நடுவர்: கவிஞர் Sara Bass
தலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்
செயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்
முகம்மது மற்றும் தள நிர்வாகிகளுடன்
பாரதிதாசன்சான்றிதழ்போட்டி
புத்தாண்டு புது மலரே
-பூம்புனலாய் நீ வருவாய்
சித்திரை திரு நாளே வருக
முத்திரை பதித்திட வரம்தருக
சிக்கலெல்லாம் நீங்கி
மக்கள் விளங்கவும்
நாடெல்லாம் பொது நலப்பூ பூத்து
மாநிலம் ஓங்கவும் அருள்புரி
தூங்கி கிடக்கும் தொழில்கள் துலங்கவும்
ஏங்கிகிடக்கும் விவசாயிகள் ஓங்கி உயரவும்
ஆட்சி புரியும் அரசியல்வாதிகள் அநாகரீக
காட்சி புரிந்த நிலையை மாற்றித் தூய்மையாக்கவேண்டும்
பொய்களும் தீமைகளும் மாய்த்திடவேண்டும்
தெய்வ உணர்வுகளில் உலகம் தோய்ந்திட வேண்டும்
பொன்னொளிர் காட்டியும் புத்துயிர் ஊட்டியும்
புதுமை செய்ய புத்தாண்டே பொலிவாக வா
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக