சனி, 31 டிசம்பர், 2016

கம்பன் கவிக்கூடம் 8-12-2016




கவிப் பிரியன் with Saraswathi Rajendran.
11 mins
கம்பன் கவிக்கூடம்
நட்புறவுகளுக்கு வணக்கம்
• • • • • • • • • • • • • • • • • • • • • • • • •

எமது கவிக்கூடத்தில்
03 / 12 / 2016 முதல் 08 / 12 / 2016 வரை
நடைபெற்ற புதுக்கவிதை போட்டியின்
முடிவுகள்.
தலைப்பு - கருணைக்கு ஏன் பஞ்சம்
வெற்றிவாகை சூடிக்கொள்கிறார்
<><><><><><><><><><><><><><><><><><>
கவிஞர். சரஸ்வதி ராஜேந்திரன்
<><><><><><><><><><><><><><><><><><>
அவர்களுக்குவாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
கருணைக்கு பஞ்சம் ஏன்?
மனிதரெல்லாம் மனம் மாறிவிட்டார்
மனித குல கருணைதான்
மகத்துவச் சேவை என்பதை மறந்து
அடுத்தவன் கஷ்டப்பாட்டால்
ஆனந்தப்படுகிறார்
பெற்றுப்பேணி வளர்த்தோரை
பெற வேண்டியதையெல்லாம்
பெற்றுக்கொண்டு
முதியோர் இல்லம் அனுப்பும்
மூட இளைஞர்களுக்கு ஏன் கருணைபஞ்சம்
நடைபாதையிலே மயக்கமுற்று
கிடக்கும்jமனிதனுக்கு உதவாமல்
சுயபடம் எடுத்து முகப்புத்தகத்தில்போடும்
இளைஞனுக்கு கருணை பஞ்சம்
காசு பணத்திற்குஆசைப்பட்டு
கலப்படம் செய்யும் வியாபாரிகளுக்கு
கூலி பணத்திற்காக கொண்டவனையே
கொலை செய்யும் கொடூரனுக்கு என
புண்ணாக்கும் கருணை பஞ்சம்
புரையோடிப் போனால்
என்னாகும் நாடூ சிந்திப்பீர்
தொலைந்து போன கருணையை
வலிந்து தேடுங்கள்
கல் நெஞ்சை மென்மையாக்குங்கள்
நல் நெஞ்சோடு வளருங்கள்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக