சனி, 31 டிசம்பர், 2016

தமிழமுது கவிச்சாரல்11-12-2016#தமிழமுது_கவிச்சாரல்_வணக்கம்_பாவலர்களே
(((((((((((((((((((((((((((((((((((((((0))))))))))))))))))))))))))))))))))))
#பாரதியார்_பிறந்த_நாள்_சிறப்புச்__சான்றிதழ்
(((((((((((((((((((((((((((((((((((((((0))))))))))))))))))))))))))))))))))))
உலகப்பெருங்கவி பாரதி
உணர்ச்சியூட்டும் பாக்களாலும்
எழுச்சியூட்டும் கட்டுரையாலும்
கிளர்ச்சியூட்டும் பேச்சாலும்
விடுதலை வேட்கையைதூண்டியவன்
தொட்டுப்பார்க்காத துறையில்லை எமை
விட்டுப்போனாலும் உன்
கவிதைகள் காலம் கடந்தும் நிற்பவை
வீரத்தின் விளை நிலம்
விடுதலை இயக்கத்தின் ஆதாரம்
சிந்திய கவிதைகளால்
செவிகளில் தேன் பாய்ச்சியவன்
சுட்டும் விழிகளால்
சுட்டெரிக்கும் கவிதை தந்தவன்
இயற்கையிலேயே
கவித்துவம் பெற்றதால்அவனொரு
இயற்கைகவி
ஆதிதிராவிடர் ஒருவருக்கு
பூணூல் அணிவித்த
புரட்சிக்கவி
யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழிபோல்
இனிதாவன எங்கும் காணோம்
என்று சொன்ன அவன் ஒரு தமிழ்க்கவி
உன்னை பேசாத நாவில்லை
உனை அறியாத மக்கள் இல்லை
வையத்துள் வாழ்வாங்குவாழ்ந்து
வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட்ட
உன்னை உன் நினைவு நாளில்
வணங்கி நாளும் வாழ்த்துவோம்
சரஸ்வதி ராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக