வெள்ளி, 30 டிசம்பர், 2016

கவியுலக பூஞ்சோலை -28-11-16


கவியுலக பூஞ்சோலை பாவலர்களே
28.11.2016 ல் நடந்த "விழி அனுப்பும் தூது " கவிதை போட்டியின் வெற்றியாளர்
சரஸ்வதி ராஜேந்திரன்
....................................................................

அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

தலைமை
ஒரத்தநாடு. நெப்போலியன்.. மற்றும் குழுமம்
-------------------------------------------------------------------

உன் விழி அனுப்பும் தூதில்
நான் வீழ்ந்து விட்டேன் காதல் சூதில்
நாடி வரும் உன் நடையில்
நர்த்தனம் ஆடுதடி என் மனசு
ஏடு எடுத்தால் எழுத்தில்
இன்பக்கவி தோன்றுதடி
அல்லும் பகலும் நினைவெல்லாம் காதலாகி
அலந்தலை ந்து ஊரூராய் திரிந்து நானும்
செல்லரித்த ஏடாய் போனேன்
சேகரித்த நல்ல பெயரெல்லாம் போச்சு
சிக்கலில் சிதைந்து உழல்கிறேன்
சிந்திக்க முடியாமல் நிற்கிறேன்
சிந்தும் புன்னகை மந்திரத்தில்
சித்தம் தடு மாறி உழல்கிறேன்
சொல்ல வியலா துன்பங்கள் பலவும் தாங்கி
சோர்வறியாது உழைத்த நான்
இருந்த இடம் தெரியாமல் போனேன்
உன் விழி அனுப்பிய தூதில்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக