சனி, 31 டிசம்பர், 2016

செந்தமிச்சாரல் 26-11-016

இனிய மாலைவணக்கம் சாரலின் உறவுகளே.
நடைபெற்ற தெம்மாங்கு தென்றலின்
கிழக்குசிவக்கையிலே எனும் தலைப்பில்
இரண்டாமிடம் பெற்ற
சரஸ்வதி ராஜேந்திரன்
அவர்களுக்கும்
கவிஞர் ஏ.எச்.என் நௌசாத்அவர்களுக்கும்
சாரலின் நல்வாழ்த்துகள்.
இதன் சான்றிதழ் வீட்டிற்கு இந்த வாரம்அனுப்பிவைக்கப்படும். வெற்றியாளர்கள்என் உள்பெட்டியிலோ இப்பதிவிலாே தங்கள் முகவரியை மொபைல் நம்பருடன் பதிவிடுங்கள்.
கிழக்கு சிவக்கையிலே
கிழக்காலே கெளளி சொல்லிடிச்சு
உழக்கான நீதான் என் பொஞ்சாதின்னு
வழக்கு செய்யாம வாடிப்புள்ளே
எட்டுப்பட்டி ராசா நீ
கட்டுப்பாடு கொள் லேசா என்னை
கட்டுனபின்னாலதான் நான் உனக்கு ரோசா
வயலோரம் வாடிப்புள்ள
நயமாக நீயும்
வயசானா வராது அதில்
வளமான ரசமிருக்காது
தாய் தந்த பாசம் மாமா அது
தமிழ் நாட்டு ரோசம்
தரம் கெட்டு போகாத
உரமான பொண்ணு நான்
பரிசத்தை போட்டுட்டு
பரிகாரம் தேடு நீ
அரிதாரம் இல்லாத
அவதாரப்பொண்ணு நீ
பரிசம் போட்டுட்டு நான்
தரிசனம் பார்க்கிறேன் உன்
கரிசனம் கண்டு நான் வியக்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக