சனி, 31 டிசம்பர், 2016

27-12--206 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா





அன்பு கவிஞர்களே 27.12.2016ல் நடந்த பட கவிதைப் போட்டி வெற்றி கவிஞர் சான்றிதழ் பெற்றவர்களை வாழ்த்துகிறேன்.
நாளைய 27--12--16 நாளாம் படப்போட்டி
சித்திரை போலச்
சிறந்தொளிர்கின்ற
பத்தரை மாற்று
முத்திரை தங்கமே !
சேயுள முணராச் சிறுமையேன் தீய
பேயுளங்கொண்ட
பேதை நான்
வேலொடு நின்ற வேட்டுவன் போன்று
சூல் கொண்ட கருவை
சிதைத்தேன் அதன் விளைவோ இன்று உன்னுடன்
கூடி விளையாட உனக்கு
கூடப் பிறந்தவள் இல்லாததால்
தனியே தன்னந்தனியே
பிஞ்சு கரங்களால் குஞ்சுப் பறவை இறகுகளை அள்ளி நீ

பறக்க விடுகையில் என் மனம்
குறுகுறுக்கிறது குற்ற உணர்ச்சியால்
சரஸ்வதிராசேந்திரன் !






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக