வெள்ளி, 30 டிசம்பர், 2016

தமிழமுது கவிச்சாரல் -17-10-16


இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்கு
இன்பந்தரும்படி வாய்த்த நல் அமுது!
- பாவேந்தர்

வணக்கம் பாவலர்களே #கவிஞர்_கண்ணதாசன்_சான்றிதழ

இன்றைய 17--10--16 நாளாம் போட்டிக் கவிதையின் #தலைப்பு_வேர்களை_பிரிகின்ற_கிளைகள் நேற்றைய போட்டிக் கவிதையின் வெற்றியாளர் #கவிஞர்_சரஸ்வதி அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டும் போட்டியில் பங்கேற்ற அனைத்து கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்

#தமிழமுது_கவிச்சாரல்_நிர்வாகி_பிரபா_வீரமுத்து நடுவராக பங்கேற்று சிறப்பான கவிதையை சிறப்பான கவிதையை தேர்வு செய்தமைக்கு அவருக்கு வாழ்த்துக்களும் நன்றியும்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#கவிஞர்_ஊக்குவிப்புச்_சான்றிதழ்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

வேர்களைப்பிரிந்த கிளைகள்
தாய் தன்னை பிள்ளைகள் பிரிந்தாலும்
தாய்தானே பிள்ளைகளின் மூலவேர்
வேர்களை கிளைகள் பிரிந்தாலும்
கிளைகளுக்கு மூலம் வேர்தானே
விரல்கள் இல்லையெனில் கரங்கள் இல்லை வேர்களை இழந்தால் கிளைகள் இல்லை
நாட்டின் பரப்பளவோ படைபலமோ பெரிதில்லை
நல்லாட்சி நடந்தால்தான் மக்களுக்கு மகிழ்ச்சி
மரங்களை வெட்டிகாட்டைஅழித்தால் உற்பத்திஉயரலாம் ஆனால்
மழை இல்லாவிட்டால் மரங்களேது வறட்சிதானே !
நிறுவனத்தில் வர்த்தகம் வளரலாம் சம்பளம் உயரலாம்
அடக்கு முறையும் மனிதாபிமானமும் இல்லாவிட்டால் மகிழ்ச்சி ஏது?
கிளைகளுக்கு வெற்றியைத் தருவது பணம் இல்லை
வேர்களின் அன்பும் சமூக அக்கறையும் தானே !
கிளைகள் பரப்பலாம் எங்கும் ஆனால்
வேர்களை மறப்பது மனிதாபிமானமில்லை
நல்லதும் கெட்டதும் கிளைகள் நன்கறிய
வல்லமை செய்வது வேரின்றி வேறுயார்?
வந்த வழி சொல்லித்தரும் வாழவழி காட்டிவிடும்
தாறுமாறாக கிளைகள் படர்ந்தாலும்
தாங்கி நிற்பதும் என்றும் வேரே
வேர்களைப் பிரியும் கிளைகளே வாழ்வில்
நேர்ப்படுமென்றால்
கூர்வாள் கொண்டு வேர்களை வெட்டிவிட முடியுமா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக