வெள்ளி, 30 டிசம்பர், 2016

கவியுலகப்_பூஞ்சோலைக்_குழுமம் -24-9-16

கவியுலகப் பூஞ்சோலையின் 24-9-16 ஆம் நாளான கிராமிய கவிதைப் போட்டியின் தலைப்பு: #அத்தமகளே அடியே# இன்றைய கவிதையின் வெற்றியாளர்... கவிஞர் Saraswathi Rajendran #அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் ...பங்கேற்ற ஏனைய கவிஞர்களுக்கும் வாழ்த்துகள்...
*********************************
நடுவர். கவிஞர்.விஜயகல்யாணி
🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊🎉🎉🎊💐🎉🎊🎈🎊🎉💐🎊
#தலைமை_நிர்வாகி_ஒரத்தநாடு_நெப்போலியன்
#கவியுலகப்_பூஞ்சோலைக்_குழுமம்

 அத்த மவளே அடியே
ஒத்தையிலே நின்னுகிட்டு
ஒளிஞ்சிருந்து பார்த்தவளே
ஒரக் கண்ணாலேஎன்னை
ஏறக்கட்டிபார்த்தவளே
சின்ன வயசினிலே
மணலால வீடுகட்டி
மணமக்களாய் வாழ்ந்தோமே
பள்ளிக்கூடம் படிக்கையிலே
பகிர்ந்து கிட்டோம் நேசத்தை
பெற்றவரும் உற்றவரும்
பெரிதாக நினைக்கவில்லை நீ
பெரியவளாய் ஆனதுமே
உனக்கும் எனக்குமே
பெரிய திரை விரித்தார்கள்
பிரிவினையை உண்டாக்கி
ஆனாலும் என் நேசம் மாறலே
அல்லும் பகலு
உள்ளதை சொல்லிபுட்டேன்
கள்ளமில்லை என் மனதில்
உன் நினைவை மட்டுமல்ல
உசுரை சுமந்து பொறுத்திருக்கேன் என்
உசுரே நீதானடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக