வெள்ளி, 30 டிசம்பர், 2016

ஒரு கவிஞனின் கனவு தேர்வு குழுவினர் 1-10-16


இது ஒரு கவிஞனின் கனவு தேர்வு குழுவினர்
1-10-16 அன்றைய சர்வதேச சிறுவர் தின போட்டிக்கவியின் வெற்றியாளர் # கவிஞர் # சரஸ்வதி ராஜேந்திரன்# அவர்களுக்கும் இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்
சிறகடிக்கும் சிறுவர்கள்
சிந்தை மயக்கும் குருவிகள்
கள்ளமிலா உள்ளங்கள்
கொள்ளை அழகு கிள்ளைகள்
மனதில் பட்டதை மறைக்காமல்
நிஜத்தை பேசும் நிர்மலங்கள்
ஆனந்தமான உலகம்
அழகு சிறுவர்கள் உலகமே
மலர்ந்த மலர்போல்
மணங்கமழும் மல்லிகைகள்
விலையில்லா செல்வங்கள்
விந்தையான சிறுவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக