சனி, 31 டிசம்பர், 2016

செய்ய்ற்கலை சூடிகை 5-12-2016




Uthaya Sakee with Mohamed Sarfan and 2 others.
55 mins
இனிய காலை வணக்கங்கள் கவிஞர்களே....
05.12.2016 அன்று நடைபெற்ற செய்யுட்கலை சூடிகையின் "மோதி விளையாடு" எனும் தலைப்பில் சிறப்பாக கவியெழுதி கவிஞர் Saraswathi Rajendran அவர்கள் சூடிகை சான்றிதழ் பெறுகின்றார்....
அவருக்கு குழுமம் சார்பில் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் செய்யுட்கலை சூடிகை குழுமம் சார்பில் அகம் மகிழ்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்....
சிறந்த கவிதைகளை தேர்வு செய்த நடுவர் தமிழச்சி பிரபாவதி வீரமுத்து அவர்களுக்கு மனம் மலர்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்...
************************************************
சூடிகை போட்டியாளர்
மோதி விளையாடு—தலைப்பு
மோதி விளையாடு
அலை அலையாய் வந்து
அலைக்கழிக்கும் வன்மை
நிலைகுலைந்து போக
மோதி விளையாடி
ஊதித்தள்ளிவிடு சோகத்தை
கண்கட்டும் வித்தைபோல்
கெட்டசெயல்களை உன்னுள்ளே
மோதி விளையாடி
மண்மூடிபோகச்செய்
எடுத்தப் பிறவி
இனிதுற வாழ
மிருக குணம் நீக்கி
மனிதமனம் கொள்
முதலில் உனக்கு நீயே
மோதி உன் மனத்தை சுத்தப்படுத்து
அடுத்தே கெடுப்பது
அதைவிட கேடு
தடுத்து நிறுத்து மோதி
நிறை குணம் கொண்டு
நிம்மதி கொள்
அவரவர் தனக்குள்ளே
மோதி விளையாடி
செயலாற்றும் வேகத்தில்
சீர்பெறும் தீய சக்திகள்
ஊர் அடையும் நன்மைகள்
திடமான செறிவுடன்
தெளிவான அறிவுடன்
எல்லோரும் ஒன்றாக
ஏற்றத்தாழ்வு இல்லாமல்
நல்லோராய் வாழ வழி செய்ய
அவரவருடைய கெட்ட குணத்துடன்
மோதி விளையாடி
முன்னேற்றப் பாதைக்கு
முனைவோம்
சரஸ்வதிராசேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக